Tuesday, September 30, 2014

நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்தூங்காதே ...

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)

Sources: http://goo.gl/Y43Nc3

உழைப்பதிலா .....

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

கல்வி கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
அரிய பல் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

Sources: http://goo.gl/qHDAzw

சும்மா கிடந்த ......

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

Sources: http://goo.gl/xDCJgV

தடுக்காதே ...

தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா

தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா

முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்

தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே

Sources: http://goo.gl/j02EPw

சம்மதமா ...

சம்மதமா…..சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா 
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர 
சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா 
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர 
சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா 

வெகு தூரம் தனியே போவதபாயம் 
வெகு தூரம் தனியே போவதபாயம் 
தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம் 
தகுந்த துணை உங்களைபோல் ஒன்றுதான் அவசியம் 
சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா 
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர 
சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா 

கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே 
நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் ஆட்டை தடுக்குமே 
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம் 
நடந்தே போகலாம் 
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம் 
நடந்தே போகலாம் 
மீறி பசி வந்தாலும் பறவைபோலே 
பகிர்ந்தே உண்ணலாம் பகிர்ந்தே உண்ணலாம் 

சம்மதமா
இப்போ சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா 
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர 
சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா 
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர 
சம்மதமா 
நான் உங்கள் கூட வர சம்மதமா

Sources: http://goo.gl/ICqzSM

கண்ணில் வந்து மின்னல் ...

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே 
இன்ப காவிய கலையே ஓவியமே 
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே 
செழும் கனி போல சுவை தரும் மாமணி 
என் பாடிடும் பூங்குயிலே 
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து) 

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல 
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே 
சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல 
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே 
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி யேதும் இல்லை 
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை 
அன்பே இது உண்மையே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து) 

அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி 
அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி 
ஆனந்தம் காணும் நேரம் தானே 
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே 
உன்னை உன்னை தேடுதே .... 

கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே 
மானே மலரினும் மெல்லியது காதலே 
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே 
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே 
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

Sources: http://goo.gl/Ek7OJZ

No comments:

Post a Comment

Labels